சென்னை ரயிலை கவிழ்க்க முயற்சி.. நூலிழையில் பெரும் விபத்து தவிர்ப்பு.. குற்றவாளியை தட்டித்தூக்கிய போலீஸ்.!

கடந்த 7ம் தேதி அதிகாலை 02.52 மணிக்கு திருநின்றவூர் டாடா ஸ்டீஸ் கம்பெனியில் இருந்து வந்த சரக்கு இரயில் வண்டியின் என்ஜின் திருநின்றவூரில் இருந்து நெமிலிச்சேரிக்கு வந்து கொண்டிருந்தது. 

Chennai train overturn attempt... accused Arrest

திருநின்றவூர் அருகே ரயில் தண்டவாளத்தில் தென்னை மரத்துண்டை வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற போதை ஆசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கடந்த 7ம் தேதி அதிகாலை 02.52 மணிக்கு திருநின்றவூர் டாடா ஸ்டீஸ் கம்பெனியில் இருந்து வந்த சரக்கு இரயில் வண்டியின் என்ஜின் திருநின்றவூரில் இருந்து நெமிலிச்சேரிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது, சுமார் 3 அடி நீளம், 20 கிலோ எடை மற்றும் 150 mm குறுக்களவும் கொண்ட தென்னை மரத்துண்டு கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த என்ஜினை ஒட்டி வந்த Loco Pilot மதியழகள் மற்றும் Asst Loco Pilot பிரசாந்த் ஆகியோர்இன்ஜினை நிறுத்தி தண்டவாளத்தில் நடுவில் இருந்த தென்னை மர துண்டை அப்புறப்படுத்தினர். 

Chennai train overturn attempt... accused Arrest

இதன் பின் இன்ஞ்சினை இயக்கி கொண்டு ஆவடி ரயில் நிலையம் வந்து ஆவடி இரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் கொடுத்துள்ளனர். இது சம்மந்தமாக இரயில்வே அதிகாரிகள் கொடுத்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சந்தீப் மித்தல்  உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு  சம்பவத்தில் ஈடுபட்டளர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்த பாபு (42) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். 

Chennai train overturn attempt... accused Arrest

அப்போது குடிபோதையில் தண்டவாளத்தின் மீது தென்னை மர துண்டை வைத்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாபு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த தனிப்படையினருக்கு வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios