சென்னையில் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டு இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக எதிர்வீட்டுக்காரரை போலீசார் அதிரடியாக  கைது செய்தனர். 

சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் மோகன் (36). இவரது மனைவி சுமதி (31). இவர்கள் வீட்டின் எதிரே முருகானந்தம் (49) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் வேலைக்கு புறப்பட்ட மோகன், சுமதியிடம் நள்ளிரவில் வீட்டிற்கு வருவேன் எனக் கூறி சென்றுள்ளார். இதனால், சுமதி வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினார். 

இதனை அறிந்த முருகானந்தம் யாருக்கும் தெரியாமல் மோகன் வீட்டில் நுழைந்து, தூங்கி கொண்டிருந்த சுமதியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுமதி புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார்  முருகானந்தத்தை கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.