சென்னையில் 12 மணி நேரத்தில் இரண்டு குழந்தைகள் கடத்தப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 மாத  கைக்குழந்தை கடத்தப்பட்ட நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 வயது குழந்தையை மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர் இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த  ரதோஷா போஸ்லே (20) இவர் தன் கணவர் ஜானி போஸ்லே (25) உடன் சென்னை கடற்கரை கண்ணகி சிலை பின்புறம் உள்ள மணலில் வசித்து வருகின்றனர் .  பலூன் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தும் இவர்களுக்கு 8 மாதத்தில் ஜானி என்ற ஆண் குழந்தை உள்ளது. 

நேற்று இரவு 11 மணி அளவில் அடையாளம் தெரியாத  20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தாய்  ரதோஷா போஸ்லே விடம் வந்து பேசினார் , தாங்கள்  சினிமா படம் ஒன்று எடுக்கப் உள்ளதாகவும் ,   அதற்கு ஆண் குழந்தை ஒன்று தேவைப்படுகிறது  என கூறியதுடன் , அதற்கு நிறைய பணம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார் இந்நிலையில் குழந்தையுடன் தாய் ரதோஷாவை  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அந்த பெண்,  தாயை ஏமாற்றி குழந்தையை கடத்திச் சென்று விட்டனர் .   இதேபோல் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அசார் அலி( 25)  தனது மனைவி  மர்சினா(20) மற்றும் நண்பர் அமீது ஆகியோருடன் 6 வயது குழந்தை மற்றும் இரண்டு வயது குழந்தை  ரஷிதாவுடன் ஊருக்கு செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தனர் .  அதிகாலையில் ரயில் என்பதால் நடைமேடையில் படுத்து உறங்கினர் .  பின்னர் அதிகாலை 4 மணியளவில் எழுந்து பார்த்தபோது அருகில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை ரஷித்தவை காணவில்லை. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள்  ரயில்வே போலீசில் புகார் அளித்தார் புகாரை பெற்ற போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில்  அப்போது அசார் அலியின் நண்பர் அமீதின் நண்பன்  உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை நள்ளிரவு தூக்கி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது .  குழந்தையை கடத்தி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்  அதாவது நேற்று இரவு  12 மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடத்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் இருவரும் வட மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .