சென்னை திருநின்றவூரில் 10ம் வகுப்பு மாணவியை திருமண ஆசைகாட்டி பலாத்காரம் செய்த பெயிண்டர் போச்சோ சட்டத்தில் கைது சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூர் பெரியார்நகர் கங்கை தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன்(22). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, அந்த மாணவியிடம்  திருமண ஆசைவார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். 

இதில், அந்த மாணவி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால், மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதகுறித்து ஆவடி அனைத்து மகளில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். பின்னர், வாசுதேவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை இன்று காலை கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.