Asianet News TamilAsianet News Tamil

பழிக்குப் பழி.. பிரபல ரவுடி சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. கோயம்பேட்டில் பரபரப்பு..!

சென்னை கோயம்பேடு முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Chennai Rowdy Murder... police investigation
Author
First Published Aug 10, 2022, 11:03 AM IST

சென்னை கோயம்பேடு முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(28). இவர் மிது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு  ராஜ்குமார் கோயம்பேடு மந்தைவெளி தெரு வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து வந்தத 4 பேர் கொண்ட கும்பல் ராஜ்குமாரை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. 

இதையும் படிங்க;-  பார்த்ததுமே பத்திக்கிச்சு! புகார் கொடுக்க வந்த பெண்ணை கரெக்ட் செய்த எஸ்.ஐ! கதறிய கணவர் தற்கொலை.. ஆடியோ வைரல்

  Chennai Rowdy Murder... police investigation

இதனையடுத்து, உயிர் பயத்தில் மர்ம கும்பலிடம் தப்பிக்க முயற்சித்த போது விடாமல் ஓட ஒட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.  இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்ததிற்கு விரைந்த போலீசார் ராஜ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க;- டிக் டாக்கில் பிரபலமாவது எப்படி? சொல்லித் தரவா! லாட்ஜிக்கு வரவழைத்து மாணவி பலாத்காரம்! பல உல்லாச வீடியோக்கள்.!

  Chennai Rowdy Murder... police investigation

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த ஆண்டு திருவேற்காடு பகுதியில் சண்முகம் என்பவரை ராஜ்குமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தார். இவ்வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராஜ்குமார் கடந்த மாதம் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், ஏற்கனவே கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் நண்பர்களான பிரகாஷ், கண்ணன் இருவரும் கூட்டாளிகளுடன் சேர்ந்து ராஜ்குமாரை பழிக்குப் வழியாக வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios