சென்னையில் சொகுசு காரில் 3 ஆண்கள், 2 பெண்களும் கசமுசாவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் பாலியல் தொழிலாளிகள் நிலைமை வேறுமாதிரியாக உள்ளது. தற்போது ஓரளவுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் மீண்டும் பாலியல் தொழில் தலைதூக்கியுள்ளது. 

சென்னை வேளச்சேரி பகுதியில் ஒரு சொகுசு காருக்குள் வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக நேற்று முன்தினம் வேளச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வேளச்சேரி பிரதான சாலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ஒரு சொகுசு கார் நீண்ட நேரம் நின்றிருப்பதை கண்டு சந்தேகித்தனர். 

காருக்குள் சோதனை செய்தபோது அதில் 2 பெண்கள் இருந்தனர். மற்றொரு காரில் 3 ஆண்கள் இருந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து, காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் கோவிலம்பாக்கத்தை சேர்ந்த சேர்ந்த மோகன் (33), சுந்தர் (28), ராஜேஷ் (31) எனத் தெரியவந்தது. மேலும், இவர்கள் பாலியல் தொழில் புரோக்கர்களாக செயல்பட்டது தெரியவந்தது. 

மேலும், சில பெண்களை கோவிலம்பாக்கத்தில் ஒரு வீட்டுக்குள் அடைத்து வைத்திருப்பதாக கூறினர். அவர்கள் குறிப்பிட்ட வீட்டுக்கு சென்று 5 பெண்களை மீட்டனர். இதுகுறித்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலியல் தொழில் நடத்திய 3 வாலிபர்களை கைது செய்தனர். பிடிபட்ட 7 பெண்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.