நேற்றிரவு சென்னையில் ஐடி பெண் ஊழியர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது கொலையை தற்கொலையா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் ஐடி பார்க்கில் பணிப்புரிந்து வந்தார் திருச்சியை சேர்ந்த டனிதா ஜீலியஸ்/28, என்ற பெண் ஊழியர், நேற்று இரவு பணியில் இருக்கும் பொழுது 8 வது மாடியில் இருந்து விழுந்து உயிர் இழந்தார். நேற்றைய முன்தினம்தான் அவர் பணியில் சேர்ந்த நிலையில் அந்த பெண் ஊழியர் கீழே விழுந்து உயிர் இழந்துள்ளார், இது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில்  அவரை உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலிசார், திருச்சியில் உள்ள அவரது பெற்றோர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும்  அவர் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாரேனும் அவரை கீழே தள்ளிவிட்டனரா என்ற கோணத்திலும் போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.