சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதி மன்றம்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை ஐஐடியில்  முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த 
முதலாமாண்டு மாணவி பாத்திமா லத்தீப் கடந்த நவம்பர் 9 ம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அவரது மரணம் தொடர்பாக விடுதி காப்பாளர் லலிதா தேவி,  கொடுத்த புகாரில் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு  செய்தனர். இந்நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் கடந்த நவம்பர் மாதம் வரை சென்னை ஐஐடி யில் 14 மாணவர்கள்  மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும், 

தொடர்ச்சியாக  சந்தேக மரணங்கள் நடந்து வருவதாலும், பாத்திமா  வழக்கு உட்பட இதுவரை  ஐ.ஐ.டி யில் மர்மமான முறையில் உயிரிழந்தோர் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி  தேசிய மாணவர்கள் கூட்டமைப்பு சார்பிலும், லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியின் சார்பிலும்  சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தொடரப்பட்ட்டிருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவி மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை தற்போது  மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டு வருவதாகவும், 


 

சிபிஐ யில் பணியாற்றிய அதிகாரிகள் மத்திய குற்றப்பிரிவு பிரிவில் இடம் பெற்றுள்ளதாகவும்,  மத்திய குற்றப்பிரிவின் ஏடிஜிபி விசாரணை அதிகாரியாக செயல்படுவதோடு, சென்னை மாநகர காவல் ஆணையர் வழக்கை நேரடியாக கண்காணித்து வருவதாகவும், விசாரணை ஆரம்பித்து மிக குறுகிய காலத்தில் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை முகாந்திரமற்றது எனவும், வாதிட்டார்..இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள்  எம். சத்திய நாராயணன் அமர்வு, மாணவர்களுக்கு அவ்வப்போது மன நல ஆலோசனை வழங்க சென்னை  ஐ.ஐ.டி நிறுவனத்துக்கு அறிவுறுத்தி,  இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றுவது தொடர்பாக அரசே முடிவெடுத்து கொள்ளலாம் என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.