சென்னையில் பட்டப்பகலில் ஒரே நாளில் 8 இடங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடத்திருப்பது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கோட்டூர்புரம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் செல்வி. இவர் அப்பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த கொள்ளையர்கள் 2 பேர் செல்வி அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்தனர். அப்போது அவர் தவறி கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்த செல்வி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அதேபோல், மயிலாப்பூரில் சாந்தா என்ற பெண்ணிடம் 1 பவுன் நகையும், திருவல்லிக்கேணியில் சுதாதேவி என்பவரிடம் 5 பவுன் நகையும் பறிக்கப்பட்டது. ராயப்பேட்டை பகுதியிலும் பெண் ஒருவரிடம் கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர். ஒரே நாளில் நடந்த இந்த செயின் பறிப்பு சம்பவத்தில் கைவரிசை காட்டியது ஒரே நபர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இதனிடையே, சென்னையில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், ஒரே நாளில் 8 வழப்பறி சம்பவங்கள் நடைபெற்றிருப்பது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.