ஐரோப்பிய நாட்டில் இருந்து துபாய்க்கு படிக்க சென்ற 22 வயது மாணவியை காதல்வலையில் விழ வைத்து ரூம் போட்டு கர்ப்பிணியாக்கி விட்டு தலைமறைவான சென்னையைச் சேர்ந்த இளம் தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை அமைந்தகரை ரயில்வே காலனி 3-வது தெருவை சேர்ந்தவர் ரூமேஸ் அகமது (28). இளம் தொழிலதிபர். இவர், பெரிய அளவில் இறால் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர், தொழில் தொடர்பாக சில மாதங்களுக்கு முன் துபாய் நாட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஐரோப்பாவில் உள்ள லிதுவேனியா நாட்டை சேர்ந்த உக்னே பெரேவேரி செவைத் (22) என்ற மாணவி துபாய் நாட்டில் மேற்படிப்பு படித்து வந்துள்ளார். அங்கு உக்னே பெரேவேரியும், செவைத் இளம் தொழிலதிபர் ருமேஸ் அகமதுவும் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இருவரும் பலமுறை தனிமையில் இருக்கும் போது உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால், உக்னே பெரேவேரி 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். அதன் பின்னர் இந்தியாவிற்கு தனது காதலியை ருமேஸ் அகமது அழைத்து வந்து, எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தங்க வைத்துள்ளார். இதனையடுத்து, உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்று நிர்பந்தப்படுத்தி ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் அந்த மாணவிக்கு கருக்கலைப்பு செய்துள்ளார். 

நாட்கள் நீண்டு கொண்டே செல்ல ரூமேஸ் அகமது மீண்டும் அவரை துபாய்க்கு அழைத்து சென்றுள்ளார். இருவரும் இணைந்து சுற்றியதாகவும், இதனால் அவர் மீண்டும் கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பமான மாணவியை மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்த ரூமேஸ் அகமது, தனது வீட்டிற்கு அழைத்து செல்லாமல் எழும்பூரில் அறை எடுத்து தங்கவைத்துவிட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த உக்னே பெரேவேரி செவைத் ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தன்னை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவான காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, ரூமேஸ் அகமது மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தேடி வந்தனர். பின்னர், தலைமறைவாக இருந்த ரூமேஸ் அகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.