Asianet News TamilAsianet News Tamil

கணவனைத் தொடர்ந்து நச்சரித்த மனைவி... தொசைக்கரண்டியால் அடித்தே கொன்ற கணவர்!

சொத்து கேட்டு மனைவி தொடர்ந்து நச்சரித்ததால், ஆத்திரத்தில் தொசைக்கரண்டியால் அடித்து கொலை செய்த கணவனை போலீசார்
கைது செய்துள்ளனர்.

chennai auditor killed his wife... husband arrest
Author
Chennai, First Published Sep 27, 2018, 3:39 PM IST

சொத்து கேட்டு மனைவி தொடர்ந்து நச்சரித்ததால், ஆத்திரத்தில் தொசைக்கரண்டியால் அடித்து கொலை செய்த கணவனை போலீசார் 
கைது செய்துள்ளனர். தாயை கொலை செய்தது கூட தெரியாமல் அவரது மகன் கம்யூட்டரில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். சென்னை அசோக்நகரைச் சேர்ந்தவர் அண்ணாமலை (65). இவரின் இரண்டாவது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு கவிதா என்ற மகளும் சந்தோஷ் என்ற மகனும் உள்ளனர். 

அண்ணாலை, அரசு அலுவலகத்தில் ஆடிட்டராகப் பணியாற்றி  ஓய்வுபெற்றவர். இவர்களது மகள் கவிதா ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். மகன் சந்தோஷ் ப்ளஸ்2 படிக்கிறார். அண்ணாமலை ஓய்வு பெற்ற பிறகு, தனியாக ஆடிட்டர் அலுவலகம் நடத்தி வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அண்ணாமலைக்கும் கவிதாவுக்கும் சொத்து விவகாரம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று கொலை செய்யப்பட்டுகிடந்துள்ளார். chennai auditor killed his wife... husband arrest

கழுத்து, தலையில் கத்தி குத்து காயங்கள் இருந்த நிலையில், இரண்டு கைகளிலும் மணிக்கட்டு உடைந்த நிலையில் கட்டிலுக்கு அடியில் அவரது உடல் கிடந்துள்ளது.இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மகேஷ்வரியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நகை, பணத்திற்காக கொலை நடந்திருக்கலாம் என்று எண்ணிய போலீசார், அவருடைய கணவர் அண்ணாமலையிடம் 
விசாரித்தனர். அண்ணாமலையிடம் போலீசார் நடத்திய விசாரணையில், முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். அவரிடம் போலீசார் 
தீவிரமாக விசாரித்ததில், மனைவி மகேஷ்வரியை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். chennai auditor killed his wife... husband arrest

இதனை அடுத்து அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் ஒருவர் கூறும்போது, அண்ணாமலையின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளது. அதன் பிறகு, பெற்றோர் சம்மதத்துடன் மகேஸ்வரியை திருமணம் செய்து கொண்டுள்ளார். மகேஸ்வரி அவரை விட 14 வயது சிறியவர். 

அண்ணாமலையின் பெயரில் வீடும், வங்கி லாக்கரில் 25 சவரன் நகைகளும் இருந்துள்ளன. வீட்டை தன்னுடைய பெயருக்கு மாற்றித் தரும்படி அண்ணாமலையிடம் மகேஸ்வரி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று இரவு விடிய விடிய அவர்களுக்கு கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. காலையில், கவிதா வேலைக்கு சென்று விட்டார். மகன் சந்தோஷ் தன்னுடைய அறையில் வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்துள்ளார்.

விடிந்த பிறகும், மகேஷ்வருக்கும் அண்ணாமலைக்கும் மீண்டும் சண்டை தொடர்ந்துள்ளது. அப்போது ஆத்திரத்தில், வீட்டின் வெளியில் 
கிடந்த கல்லை எடுத்து மனைவியின் தலையில் அடித்துள்ளார். மகேஷ்வரி ரத்த வெள்ளத்தில் மயங்கியுள்ளார். இதன் பிறகு, வீட்டில் இருந்து தோசைக்கரண்டியை எடுத்து வந்து மனைவியின் தலையில் அடித்துள்ளார். பின்னர் வீட்டை பூட்டி விட்டு அண்ணாமலை சென்று விட்டார். ஆனால், கொலை நடந்தபோது சந்தோஷ் வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்துள்ளார். அவருக்கு இது எதுவும் தெரியவில்லை. chennai auditor killed his wife... husband arrest

வேலை முடிந்து வீட்டுக்கு காரில் வந்திறங்கிய கவிதாவுடன் அண்ணாமலையும் எதுவும் தெரியாதது போல் வந்துள்ளார். பெட்ரூமில் 
மகேஸ்வரி ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 
மகேஸ்வரி, ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அண்ணாமலையிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். இதனை தொடர்ந்து அவரைக் கைது செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios