செய்யூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த  திமுக நிர்வாகி தேவேந்திரன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த நைனார்குப்பம் கிராமத்தை சேர்ந்த சசிகலா என்ற இளம்பெண் கடந்த 24ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் உடலை கைப்பற்றி மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், தனது தங்கையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது சகோதரர் செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திமுகவை சேர்ந்த தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருஷோத்தமன் ஆகிய இருவரும் தன் தங்கையை கொலை செய்து விட்டு நாடகமாடுகின்றனர் என்று குற்றம் சாட்டினார். 

மேலும், சசிகலா குளிக்கும்போது தேவேந்திரனும், புருஷோத்தமனும்,  வீடியோ எடுத்து அவருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும், வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக தேவேந்திரன், புருஷோத்தமன் ஆகியோர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். பின்னர், புருஷோத்தமனை கைது செய்யப்பட்ட நிலையில் தேவேந்திரன் தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். 

இந்நிலையில், இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தேடப்பட்டு வந்த திமுக நிர்வாகி தேவேந்திரனை போலீசார்  கைது செய்யப்பட்டார்.  சென்னை வியாசர்பாடியில் பதுங்கியிருந்த தேவேந்திரனை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.  இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே அவரது சகோதரர் புருஷோத்தமன் கைது செய்யப்பட்ட நிலையில் தேவேந்திரன் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.