சிறுவனுடன் நடந்து சென்ற பெண்ணிடம் கத்தி முனையில் நகை பறித்து சென்ற அதிர்ச்சி காட்சி சிசிடிவி கேமெராவில் பதிவாகி உள்ளது.

டெல்லியில், கடந்த 26 ஆம் தேதியன்று இரவில் தன் பேரக் குழந்தையின் கையை பிடித்துக்கொண்டு ரோட்டில் நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த இரு நபர்கள், திடீரென அந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, கழுத்தில் இருந்த செயினை பறித்து சென்று விட்டனர்.

சாதரணமாக நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண்மணியிடம் திடீரென கொளையன் கத்தியை காட்டி மிரட்டி தான் அணிந்து இருந்த செயின் மற்றும் வளையலை பறித்து சென்றது ஒரு பக்கம் இருக்க, உயிர் பிழைத்தால் போதும் என குழந்தையை அழைத்து கொண்டு பயத்தில் வேகமாக நடந்து செல்வதை பார்க்க முடிந்தது.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.