Asianet News TamilAsianet News Tamil

ஸ்கூல் வேன்களில் சி.சி.டிவி, ஜி.பி.எஸ்..! நோட்டீஸ் அனுப்பிய உயர் நீதிமன்றம்...

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி, சிசிடிவி கட்டாயம் பொறுத்த வேண்டும் என  கோரித் தொடுக்கப்பட்டிருந்த வழக்கிற்காக  தமிழகப் பள்ளிக் கல்வித் துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு இருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். 

cctv fix for school and collage buses
Author
Chennai, First Published May 16, 2019, 10:31 AM IST

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி, சிசிடிவி கட்டாயம் பொறுத்த வேண்டும் என  கோரித் தொடுக்கப்பட்டிருந்த வழக்கிற்காக  தமிழகப் பள்ளிக் கல்வித் துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு இருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.  சென்னை புரசைவாக்கத்தில் வசிக்கிறார் வழக்கறிஞர் கோபி கிருஷ்ணன். இவர் பொது நல வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். 

அதில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ், சிசிடிவி பொருத்த வேண்டுமென்று தான் தாக்கல் செய்த மனுவில் சொல்லியிருக்கிறார். அவரிடம் பேசினோம். “கடந்த பிப்ரவரி மாதம் கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனம் ஒன்றில் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் வாகனத்தில் வந்த நான்கு வயது மாணவிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்து இருந்தார்கள். 

இதுதொடர்பாக ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கிறார். இது போன்ற சம்பவங்களால் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அதனால் இது போன்ற குற்றங்களைத் தடுக்கவும், பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யவும் பள்ளி வாகனங்களில் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவிட வேண்டும். 

இது தொடர்பாக, தமிழக அரசிடம் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை மனு அளித்தேன். ஆனால் இதுவரை எனது கோரிக்கை மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” இதை நான் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டதாக சொல்கிறார். இதை விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு எடுத்து விசாரித்தனர். 

இந்த வழக்கு தொடர்பாக தமிழகப் பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் நான்கு வாரங்களில் பதில் அளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டனர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள். மேலும்  இந்த வழக்கானது வரும் ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios