டுவிட்டர் பதிவிலேயே காவல் துறை அதிகாரிகள் இந்த சம்பவத்திற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிஷ் தனது பதிவில் வலியுறுத்தி இருந்தார்.

உத்திர பிரதேச மாநிலத்தின் பரேலி பகுதியில் இருவர் பாகிஸ்தானை புகழும் வகையிலான வரிகள் கொண்ட பாடல்களை செல்போனில் வைத்து கேட்டுக் கொண்டு இருந்துள்ளனர். பரேலி பகுதியை சேர்ந்த ஆசிஷ் என்பவர் பாகிஸ்தானை புகழும் பாடலை கேட்பதற்கு இருவரிடமும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

வாக்குவாதம்:

மேலும் பாகிஸ்தானை புகழும் பாடலை நிறுத்துமாறு இருவரிடமும் வலியுறுத்தினார். எனினும், இருவரும் பாடலை நிறுத்த முடியாது என கூறி, ஆசிஷ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் சேர்ந்து ஆசிஷனை தாக்க முற்பட்டனர். இந்த சம்பவங்கள் அனைத்தையும் ஆசிஷ் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். 

இதோடு தனது செல்போனில் பதிவு செய்த வீடியோவை ஆசிஷ் தனது டுவிட்டரில் பதிவிட்டார். மேலும் டுவிட்டர் பதிவிலேயே காவல் துறை அதிகாரிகள் இந்த சம்பவத்திற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிஷ் தனது பதிவில் வலியுறுத்தி இருந்தார். 

வீடியோ:

இந்த வீடியோ காவல் துறையினர் கவனத்திற்கு சென்றது. இதை அடுத்து விசாரணையை மேற்கொண்ட போலீசார், பாகிஸ்தானை புகழும் பாடல்களை கேட்டதோடு, ஆசிஷ் உடன் ரகளையில் ஈடுபட்ட இருவர் மீதும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்த முயன்றதாக வழக்குப் பதிவு செய்தனர்.

"பரேலியில் உள்ள பூட்டா பகுதியின் சிங்கை முராவன் கிராமத்தைச் சேர்ந்த இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருக்கிறோம். தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்த முயன்றதை அடுத்து இருவர் மீது ஐ.பி.சி. 153 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து அடுத்தக்கட்ட விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது," என பரேலி பகுதிக்கான கூடுதல் எஸ்.ஐ. ராஜ்குமார் அகர்வால் தெரிவித்து இருக்கிறார்.

பரபரப்பு:

உத்திர பிரதேச மாநிலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான பாடல்களை கேட்டதோடு, அதனை தட்டிக் கேட்ட வாலிபரை இரண்டு பேர் சேர்ந்து கொண்டு தாக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.