சென்னை அடையாறில் அஸ்வினி பிஷரிஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது நிறுவனத்தில் இருந்து ஒரு ஹார்ட் டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டது. 

அந்த ஹார்ட் டிஸ்க்கை ஆராய்ந்த அதிகாரிகள், ஊழியர் செந்தில்குமார் பெண்கள் கழிவறையில் ஸ்பை கேமரா வைத்திருப்பதை கண்டறிந்தனர். 


ஊழியர் செந்தில் குமார் யாருக்கும் தெரியாமல் பெண்கள் ரெஸ்ட் ரூமில் கேமரா பொருத்தி அதன் மூலம் பெண் ஊழியர்கள் உடைமாற்றவது போன்ற காட்சியை படமாக்கியுள்ளார்.

அநத காட்சிகளை தனது வீட்டில் உள்ள ஹார்ட்டிஸ்க்கில் வைத்துள்ளார். இதை அவர் சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக வைத்திருந்தார் என அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

ஆனால் ஊழியர் செந்தில்குமார் திடீரென அந்த  நிறுவன வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அடையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.