அங்குள்ள ரயில்வே வளாகத்திற்குள் ஒரு ஒதுக்குப்புறமான இடத்துக்கு இழுத்துச் சென்றுள்ளார் . பின்னர் அந்த கால் டாக்சி டிரைவரை நிர்வாணப்படுத்தி அவருடன் இயற்கைக்கு மாறாக உறவு கொண்டுள்ளார்.
கால் டாக்ஸி டிரைவர் ஒருவர் பணியில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிளால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . தனக்கு ஏற்பட்ட காமவெறியை கால்டாக்சி டிரைவரிடன் போலீஸ்காரர் தீர்த்துக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . மும்பை சிவப்பு விளக்கு பகுதிக்கு சவாரி வர மறுத்ததால் டாக்ஸி ஓட்டுனர் பலாத்காரத்திற்கு ஆளானதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் அருகே சாலையோரம் கால் டாக்ஸி டிரைவர் ஒருவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அமித் தங்கட் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் அவரிடம் தெற்கு மும்பை கிரான்ட் ரோடு பகுதியில் உள்ள விபச்சார விடுதிவரை சவாரிக்கு வருமாறு அழைத்தார் ஆனால் அந்த கால்டாக்சி டிரைவர் சவாரிக்கு வர மறுத்துள்ளார், இதனால் ஆத்திரமடைந்த அந்த போலீஸ் கான்ஸ்டபிள் அந்த கால் டாக்ஸி டிரைவரை கொடூரமாக தாக்கியதுடன் , அங்குள்ள ரயில்வே வளாகத்திற்குள் ஒரு ஒதுக்குப்புறமான இடத்துக்கு இழுத்துச் சென்றுள்ளார் . பின்னர் அந்த கால் டாக்சி டிரைவரை நிர்வாணப்படுத்தி அவருடன் இயற்கைக்கு மாறாக உறவு கொண்டுள்ளார். பின்னர் அந்த நபரை அங்கேயே விட்டுவிட்டு அவரிடம் இருந்த செல்போன் , பணம் மற்றும் அவரது கார் சாவி உள்ளிட்டவைகளை பறித்துக் கொண்டு சென்றுள்ளார் அந்த கான்ஸ்டபிள்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட கார் டிரைவர் அவசர உதவி எண் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க , அங்கு வந்த போலீசார் அவரை மீட்டு அவரிடமிருந்து புகாரை பெற்றதுடன், தகாத முறையில் நடந்துகொண்ட போலீஸ் கான்ஸ்டபிள் மீது கொலை முயற்சி , மற்றும் இயற்கைக்கு முரணான பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கான்ஸ்டபிளின் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த அவர் சார்ந்த ரயில்வே போலீசார் , கான்ஸ்டபிள் தங்கட்டை சஸ்பெண்டு செய்துள்ளனர். அத்துடன் அவர் மீது மேல் நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். உல்லாச விடுதிக்கு வர மறுத்ததால் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் இயற்கைக்கு முரணான உடலுறவு கொண்டு சித்திரவதை செய்துள்ள சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
