வயாக்ரா மாத்திரைகளை உட்கொண்டு 76 வயதான தொழிலதிபர் ஒருவர் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. இந்த கொடூரமான காட்சிகளின் பின்னணியை  போலீசார் விசாரிக்கையில், பல பதறவைக்கும் தகவல்களை வெளியானது.

ஆத்துார் உடையார்பாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நடராஜன். இவர்தான் 17 வயது பள்ளி மாணவியை தனது பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தியதாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொழிலதிபர் பாலியல் லீலைகளை ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துள்ள கும்பல் அவற்றைக் காட்டி 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

கடந்த 12-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு ஆத்துார் நகர காவல்நிலையத்திற்கு இளம் பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது ஆத்துார் வடக்கு உடையார்பாளையத்தைச் சேர்ந்த பிரபல தொழிலபதிபர், 76 வயதான நடராஜன் என்பவர் கடந்த 2 மாதகாலமாக தன்னை பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தியதாகவும் வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் புகாரளித்தார்.

புகாரை வாங்கிய போலீசார், தொழிலதிபரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் நடந்தது உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் முதியவர் நடராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் உடையார்பாளையத்தில், பிரபல இருசக்கர வாகன விற்பனை டீலராக இருப்பவர் நடராஜன். அதே பகுதியைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள்தான்  சியாமளா. இவர் அந்தப் பகுதியில் உள்ள பெண்கள் அரசுப் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

குடும்பச் சூழல் காரணமாக அந்த பெண் அக்கம்பக்கத்து வீடுகளில் வேலை செய்தபடியே படித்து வருகிறார். தொழிலதிபர் நடராஜன் வீட்டிற்கும் அந்த சிறுமி வேலைக்காக சென்று வந்துள்ளார். அப்போது சிறுமியிடம் ஆசை வார்த்தை காட்டிய  தொழிலதிபர் நடராஜன், அவரைப் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

தனது அலுவலகத்தில் உள்ள அறையில் அவர் கடந்த 2 மாதங்களாக வயாகரா மாத்திரையை போட்டுக்கொண்டு சிறுமியை பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி  உடலுறவில்  ஈடுபடும்படி நடராஜன் கொடுமைப்படுத்தியதாக விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.