இமாச்சல பிரதேச மாநிலம் குல்லு மாவட்டத்தின் பஞ்ஜார் பகுதியிலிருந்து 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு கடகுஷானி என்ற இடத்திற்கு தனியாருக்கு சொந்தமான பஸ் சென்று கொண்டிருந்தது.

பஞ்ஜார் பகுதியில் உள்ள மலைப்பாங்கான கோர்ச் என்ற பகுதியை கடக்கும்போது எதிர்பாராத விதமாக பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டினை இழந்தது. இதையடுத்து அருகிலுள்ள கிடுகிடு பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த  விபத்தில் உயிரிழந்த 25 நபர்களில் 15 பேரின் உடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது. மற்றவர்களின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.