திருப்பத்தூர் அருகே மனைவியே கள்ளக்காதலுக்காக பெட்ரோல் ஊற்றி கணவன் எரித்துக் கொலை செய்து விட்டு 2 குழந்தையையும் தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா சோமநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சசிகுமார்(37). இவரது மனைவி பிரியா(37). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பிரஜித்(10),  ப்ரிதிகா(8).  இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வெளிநாட்டில் வேலை செய்து வந்த போது சசிகுமார் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பேச அதிக விலையில் ஸ்மார்ட் போன் வாங்கி அனுப்பியுள்ளார். இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் சொந்த ஊருக்கு திரும்பி குடும்பத்துடன் வசித்து வந்தார். வெளிநாட்டில் வந்ததில் இருந்தே தம்பதி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில், நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. அன்றிரவு பிரியா லேசான தீக்காயங்களுடன் அலறியடித்தப்படி வீட்டின் வெளியே வந்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது, தன் மீதும், குழந்தைகள் மீதும் கணவர் சசிகுமார் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்ல முற்சிப்பதாக தெரிவித்தார். 

இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது சசிகுமார் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். மேலும், 2 குழந்தைகள் முகம் மற்றும் கைகளில் தீக்காயங்களுடன் இருந்தனர். இதனையடுத்து, 3 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்க அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சசிகுமார் உயிரிழந்தார். குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, பிரியா முன்னுக்குப்பின் முரணமாக பதில் அளித்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர், அதில், பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். பிரியா அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில்;- பேஸ்புக், டிக்டாக் என அனைத்து செயலிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்த பிரியாவுக்கு, நிறைய ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் அடிக்கடி ஊர் சுற்றியும் வந்துள்ளார். அடிக்கடி செல்போனிலும் பேசி வந்துள்ளார். இதனால், கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டு என்னை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த நான் அவரை தீர்த்துக்கட்ட கடந்த ஒரு மாதத்திற்கு முன் திட்டம் தீட்டினேன். நேற்று முன்தினம் கேளில் 200 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கி வந்தேன். கணவன் மற்றும் குழந்தைகள் இரவு தூங்கிக்கொண்டிருந்த போது அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தேன். பின்னர், என் மீதும் கணவர் தீ வைத்ததாக கூறி அக்கம்பக்கத்தினரை நம்ப வைத்தேன் என வாக்குமூலம் அளித்தாக போலீசார் தெரிவித்துள்ளனர்.