மும்பையில் வசித்து வந்த ரோசினா என்ற 31 வயது பெண்ணுக்கு பாருக்கு செல்லும் பழக்கம் இருந்திருக்கின்றது. அப்போது அவர் ஒரு நபரிடம் நெருக்கமாகியுள்ளார். இந்த நெருக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி ரோசினா வீட்டிற்கு வந்த ரோசினாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார். ரோசினா கேட்ட பணத்தையும் அவ்வப்போது அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார்.

 

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் அதிக ஆசைப்பட்ட ரோசினா பெரும் தொகை ஒன்றை கேட்க அதனை கொடுக்காமல் அந்த நபர் இழுத்தடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரோசினா,  கள்ள காதல் உறவை அவருடைய மனைவியிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனை அடுத்து ஒரு நாள் ரோசினாவின் வீட்டிற்கு வந்த நபர் அதிக அளவில் மது கொடுத்து மயக்கம் அடைய செய்து அதன்பின் தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்துள்ளார்.

ரோசினாவின் கொலை குறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர் சிசிடிவியில் பதிவான வீடியோவின் உதவியால் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தற்போது அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.