மனைவியின் நடத்தை மீது சந்தேகமடைந்த கணவர், தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பள்ளிக்கரணையில் நடந்துள்ளது. சென்னை, வேளச்சேரியை அடுத்த பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  

வேளச்சேரியில் உள்ள தனியார் சிட் பண்டு ஒன்றில் கிருஷ்ணமூர்த்தி காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதே நேரத்தில் மகாலட்சுயும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். மகாலட்சுமி வேலைக்கு செல்வதை கிருஷ்ணமூர்த்தி விரும்பவில்லையாம். வேலைக்கு செல்ல வேண்டாம் என்றும் அவ்வப்போது மகாலட்சுமியிடம் கூறி வந்துள்ளர் கிருஷ்ணமூர்த்தி. 

ஆனாலும், மகாலட்சுமி, வேலைக்கு செல்வதை நிறுத்தவில்லை. இந்த நிலையில், மகாலட்சுமியின் நடத்தை மீது கிருஷ்ணகுமார் சந்தேகமடைந்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கு அவ்வப்பொது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக நேற்றும் அவர்களுக்கிடையெ தகராறு ஏற்பட்டுள்ளது. கடுமையான சண்டைக்குப் பிறகு இரவு அவர்கள் தூங்கச் சென்றனர். ஆனாலும் கோபம் தீராத கிருஷ்ணமூர்த்தி, நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த மகாலட்சுமியை, காய்கறி நறுக்கும் கத்தியைக் கொண்டு சரமாரியாக வெட்டியுள்ளார். 

இதில் பலத்த காயமடைந்த மகலாட்சுமி ரத்தவெள்ளத்தில் அங்கேயே சரிந்து பிணமானார். மனைவியை வெட்டிக் கொலை செய்த கிருஷ்ணமூர்த்தி, பள்ளிகரணை காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். இதன் பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மகாலட்சுமியின் உடலைக் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.