திருமணம் செய்துக்கொள்ள மறுத்த பெண் மீது கொடூர தாக்குதல்… வெளியானது பதைபதைக்க வைக்கும் வீடியோ!!
மத்திய பிரதேசத்தில் திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணை கொடூரமாகத் தாக்கும் பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணை கொடூரமாகத் தாக்கும் பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசம் ரேவா மாவட்டத்தில் 24 வயதான இளைஞர் ஒருவர், தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகக் கூறி, 19 வயதுப் பெண்ணை கொடூரமாகத் தாக்கியுள்ளார். மேலும் அதனை வீடியோவும் எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அதில், அந்த நபர் அந்த பெண்ணை அடித்து கீழே தள்ளி காலால் பெண்ணின் முகத்தில் மிதிப்பதை காணலாம்.
இதையும் படிங்க: கோவையில் என்.ஐ.ஏ..! கார் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை நேரில் அழைத்து சென்று விசாரணை- பாதுகாப்பு அதிகரிப்பு
கொடூரமாக உதைத்தில் அந்த பெண் மயக்கம் அடைந்ததையும் வீடியோவில் காணலாம். இதனை அவரது நண்பர் வீடியோ எடுத்துள்ளார். பல மணி நேரமாக, சாலையில் மயக்க நிலையில் அந்த பெண் கிடந்ததாக கூறப்படுகிறது. அவரை கண்ட அக்கம்பக்கத்தினர் இதுக்குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையும் படிங்க: விருதுநகரில் 19 பெண்களை ஏமாற்றிய பலே காதல் மன்னன் கைது
பின்னர் இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பெண்ணை தாக்கிய பங்கஜ் திரிபாதி மற்றும் வீடியோ எடுத்த நபரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் பெண்ணின் குடும்பத்தார் திருமணத்திற்கு சம்மதிக்காததால் அந்த பெண் தன்னுடைய காதலனை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த பங்கஜ் திரிபாத அந்த பெண்ணை தாக்கியது தெரியவந்துள்ளது. பெண்ணை கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.