போதையில் ரகளை செய்த அண்ணன்.. கட்டையால் தலையில் தட்டிய தம்பி.. இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
திருப்பத்தூர் மாவட்டம் ஆரிப் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆசிப் (48). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அசரத்(22) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
போதையில் ரகளை செய்த அண்ணணை கட்டையால் அடித்ததில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆரிப் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆசிப் (48). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அசரத்(22) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருடைய உடன் பிறந்த தம்பி ரியாஸ் (20). நேற்று இரவு போதையில் இருந்த அசரத் அப்பகுதியில் இருந்தவர்களிடம் தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க;- என்ன குழந்தைகள் சிவப்பா இருக்கு! காதல் மனைவி மீது தீராத சந்தேகம்! சிகரெட்டால் சூடு!சித்ரவதை செய்து கொன்ற கணவர்
இந்நிலையில் தம்பி ரியாஸ் சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். மீண்டும் தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த தம்பி ரியாஸ் அண்ணனை கட்டையால் தலையின் பின் பக்கமாக வேகமாக அடித்துள்ளார். இதில் அசரத் மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை வீட்டினுள் இழுத்து சென்று படுக்க வைத்துள்ளனர். காலையில் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் உள்ளே சென்று பார்த்தபோது மூச்சு பேச்சு இல்லாமல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையும் படிங்க;- ஒரே வீட்டில் 3 வருஷமாக லிவிங் டு கெதர்! கரு கலைப்பு! திருமணமான 2 நாளில் எஸ்கேப்பான போலீஸ் காதலன்! கதறும் பெண்
உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்த போது ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரியாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தம்பியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.