ஓசூர் அருகே தம்பியே அண்ணனை வெட்டிக் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தம்பியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் மாதேஷ் வேலை செய்து வந்தார். இவரது சகோதரர் கிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். தினமும் குடிக்க பணம் கேட்டும் தொந்தரவு செய்வார். இந்நிலையில் நேற்றிரவு மாதேஷிடம் செலவுக்கு பணம் கேட்டு நச்சரித்துள்ளார். 

மாதேஷ் பணம் தர மறுத்ததோடு கிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல் இருப்பதை கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது ஆத்திரம் அடைந்த மாதேஷ் அருகில் இருந்த அரிவாளை எடுத்து அண்ணனை வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

அப்போது ஆத்திரம் அடைந்த கிருஷ்ணன் அருகில் இருந்த அரிவாளை எடுத்து அண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளார். படுகாயம் அடைந்த கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் சகோதரர் மாதேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.