சென்னையில் கடந்த 6 ஆம் தேதி கைது செய்யப்பட்ட பூங்கா வெங்கடேசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. வெங்கடேசனை காவலில் எடுத்து விசாரித்தபோது பல அப்பாவி பெண்களையும், சினிமாவில் வாய்ப்பு தேடி தேடும் பெண்களையும் குறிவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது போன்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிக் டாக், மியூசிக்கலி ஆப், டாப்ஸ் ஸ்மாஷ் போன்ற ஆப்கலீல் வீடியோ வெளியிடும் அழகான பெண்களை குறிவைத்து அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பூங்கா வெங்கடேசன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இப்படி பெண்களை பாலியல் வலையில் வீழ்த்தும் கும்பல், மொபைல் ஆப்களில் வீசிய வெளியிடும் பெண்களிடம் சிறிய தரகர்கள்  சாட் மூலம் நட்பு வளர்த்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது அம்பலமாகியுள்ளது. எனவே, டிக் டாக், மியூசிக்கலி,டாப்ஸ் ஸ்மாஷ் போன்ற ஆப்களில் வீடியோக்கள் வெளியிடும் பெண்கள் உஷாராக இருக்கவேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.