மதுரை அருகே பஞ்சாயத்து  தலைவர் உட்பட இட்டை கொலை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே குன்னத்தூர் அருகே சமணர் மலை பின்புறம்  பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணன் அதே பஞ்சாயத்தை சேர்ந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆப்ரேட்டர் முனுசாமி ஆகியோர் மர்ம  நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தெரிந்ததும் கருப்பாயூரணி போலீசார் அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு  அனுப்பி வைத்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் விசாரணையில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சனையா? அல்லது பெண்கள் பிரச்சனையா? அல்லது தண்ணீர் திறந்து விடுவதில் ஏதாவது பிரச்சனை இருக்குமா என்கிற ரீதியில் பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.