நாளடைவில், நட்பு காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, அவர்கள் பலமுறை ரூம் போட்டு தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, தனது காதலிக்கு தெரியாமல் அதை பிரதீப் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். இந்நிலையில், பிரதீப் இந்த வீடியோக்களை  தனது காதலியிடம் காண்பித்து வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அதை வெளியிடுவதாக  தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். 

தனிமையில் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து காதலியை மிரட்டிய காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சென்னை ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பிச்சு என்பவரின் மகன் பிரதீப்(20). இவர் முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி டயாலிசிஸ் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களிடையே நட்பு ஏற்பட்டது. 

நாளடைவில், நட்பு காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, அவர்கள் பலமுறை ரூம் போட்டு தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, தனது காதலிக்கு தெரியாமல் அதை பிரதீப் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். இந்நிலையில், பிரதீப் இந்த வீடியோக்களை தனது காதலியிடம் காண்பித்து வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அதை வெளியிடுவதாக தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். 

இதனால், அதிர்ச்சியடைந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பிரதீப்பை நேகைது செய்தனர். இதனையடுத்து, அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க;- இளம்பெண்ணுடன் கணபதி சில்க்ஸ் உரிமையாளரின் மகன் உல்லாசம்...? பணம் கொடுத்து பேரம் பேசுவதாக பெண் கதறல்