Asianet News TamilAsianet News Tamil

லவ் பண்ணிட்டு உங்க வீட்ல வேணாம்னு சொன்னா என்ன விட்டுடுவியா! காதலியை கதறவிட்ட காதலன்! இறுதியில் நடந்த பயங்கரம்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் ஹர்மடா பகுதியைச் சேர்ந்தவர் கிஷன் சைனி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.

boyfriend who killed his girlfriend tvk
Author
First Published Oct 4, 2023, 2:34 PM IST | Last Updated Oct 4, 2023, 2:35 PM IST

காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அதே கத்தியால் காதலன் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் ஹர்மடா பகுதியைச் சேர்ந்தவர் கிஷன் சைனி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, மகளை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால், கிஷன் சைனி உடனான காதலை கைவிட முடிவு செய்தார்.

இதையும் படிங்க;- நைட்டானே ஓயாமல் செக்ஸ் டார்ச்சர்.. வரமறுத்த மனைவி.. தலைக்கேறிய காமத்தால் கணவர் என்ன செய்தார் தெரியுமா?

இதுதொடர்பாக கிஷன் சைனியிடம் இளம்பெண் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், நைசாக பேசி அங்குள்ள  காட்டுப்பகுதிக்கு இளம்பெண்ணை அழைத்து சென்றுள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காதலியின் கழுத்தை அறுத்து துடிதுடிக்க கொலை செய்துள்ளார். இதனையடுத்து அதே கத்தியால் தனது கழுத்த அறுத்துக் கொண்டுள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் இதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க;-  சென்னை காசி திரையரங்கு அருகே பயங்கரம்.. சிக்னலைக் கடக்க முயன்ற ஐடி ஊழியர்.. அரசு பேருந்து மோதி பலி.!

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த  கிஷன் சைனியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios