தன்னிடம் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, வேறொருவருடன் தகாத உறவு வைத்துக்கொண்ட கள்ளக்காதலி வெறித்தனமாக வெட்டியுள்ளார் முதல் கள்ளக்காதலன்.  

காரமடை அருகே சின்னதொட்டிப்பாளையத்தை சேர்ந்த சுஜாதாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது இவரது கணவன் பிரபு, 2 வருஷத்துக்கு முன்னாடி ரெயில் விபத்தில் இறந்து விட்டார். 
அதனால் குழந்தைகளுடன் தனிமையில் வசித்து வந்தார் சுஜாதா. குழந்தைகளை காப்பாற்ற மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிளீனிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். 

அப்போதுதான் காரமடையை சேர்ந்த தங்கராஜ் என்பவர் சுஜாதாவுக்கு அறிமுகமானார். இவர் ஒரு கட்டிட தொழிலாளி. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. கிட்டத்தட்ட சுஜாதாவின் கணவன் மாதிரியே வீட்டு செலவுகளை எல்லாம் தங்கராஜ் தான் பார்த்து, உதவி செய்து  வந்துள்ளார். இந்த சமயத்தில், சுஜாதாவுக்கு இன்னொருத்தருடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த பழக்கமும் நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

இவர்கள் இருவரும் தனிமையில் இருந்ததும், தன்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலக்கியதுமாக இருந்துள்ளார் சுஜாதா, இந்த விஷயத்தை அறிந்த தங்கராஜ், சுஜாதாவிடம் தகராறு செய்து, கண்டித்துள்ளார், வேறொருவருடன் உண்டான கள்ளக்காதலை கைவிட கெஞ்சியுள்ளார். ஆனால் தனது உறவை விடுவதாக இல்லை இதனால்  ஆத்திரம் அடைந்த தங்கராஜ் சுஜாதாவின் கழுத்தை வெட்ட முயன்றார். ஆனால் சுஜாதா இடது கையால் தடுக்கவும், கையின் மணிக்கட்டு பகுதியில் அரிவாளால் ஓங்கி வெட்டி விட்டார் தங்கராஜ். 

ரத்தம் கொட்ட கொட்ட வலியால் அலறி துடித்தார் சுஜாதா. ஆனால், இதையெல்லாம் கண்டு கொள்ளாத தங்கராஜ், அரிவாளை எடுத்துக் கொண்டு நேராக சென்று போலீசில் சரணடைந்தார். சுஜாதாவின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், வெட்டப்பட்டு கீழே விழுந்து கிடந்த கையை ஒரு பையில் எடுத்து வைத்து கொண்டு, சுஜாதாவை காரில் அழைத்து கொண்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.