தன் கணவர் விந்தணுவை செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய ரஷ்ய பெண், மருத்துவரின் உதவியோடு காதலனின் விந்தணுவை உட்செலுத்தி குழந்தை பெற்றுக் கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

ரஷ்யாவை சேர்ந்தவர் யானோ அனோகின் இவருக்கு வயது 38. இவர்களுக்கு குழந்தை இல்லை.. எனவே சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது, செயற்கை கருத்தரிப்பு அதாவது ஐவிஎப் செய்துக்கொள்ள முடிவு செய்தனர். அப்போது யானா தனது காதலர் விந்துவை சேகரித்து, கணவருக்கு தெரியாமல் மருத்துவரின் உதவியோடு குழந்தை பெற்றுக்கொண்டார்.

குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகும் சமயத்தில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. அப்போது  இருவரும் பிரியும் முடிவை எடுத்து உள்ளனர். அப்போது தான் யானா நடந்த எல்லாவற்றையும் தன் கணவருக்கு கூறி உள்ளார். 

அதுவரை அந்த குழந்தை தான் தன்னுடைய குழந்தை என எண்ணி மிகவும் பாசமாக வாழ்ந்து வந்துள்ளார் அவர். 
பின்னர் தான் ஏமாற்றம் அடைந்ததை போல வேறு யாரும் ஏமாற்றம் அடைய கூடாது என எண்ணிய அவர், யானா  மற்றும் உதவிய மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றார். 

இதற்காக  யானாவின் கணவர் மற்றும் அவரது குழந்தைக்கு டிஎன்ஏ சோதனை செய்து உறுதி செய்யப்பட்டது.
தற்போது யானா தனது ஒரு வயது குழந்தையுடன், அவர் விரும்பிய தன் காதலருடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற உத்தரவின் படி மாஸ்கோவை சேர்ந்த அந்த மருத்துவமனை மிஸ்டர் அனோகினுக்கு ஏற்பட்ட மன மற்றும் பண ரீதியான இழப்புக்கு 4,600 அமெரிக்க டாலர்கள் இழப்பீடாக கொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.