Asianet News TamilAsianet News Tamil

கல்லூரி படித்து வந்த மாணவியை கர்ப்பமாக்கி நாசம் செய்த காதலன்.. கருக்கலைப்பு செய்தபோது துடிதுடித்து உயிரிழப்பு.

வீட்டுக்கு தெரியாமல் காதலிக்கு கருக்கலைப்பு செய்ய முயற்சித்ததில் மாணவிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் இந்த சோகம் நடந்துள்ளது.

 
 

Boyfriend made college student pregnant..Student dies during abortion
Author
Telangana, First Published Aug 20, 2022, 6:20 PM IST

வீட்டுக்கு தெரியாமல் காதலிக்கு கருக்கலைப்பு செய்ய முயற்சித்ததில் மாணவிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் இந்த சோகம் நடந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இவற்றை தடுக்க அரசும், காவல் துறையும் எத்தனை நடவடிக்கைகள் எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, பெண்களை போலீயாக காதல் வலையில் வீழ்த்தி அவர்களை பாலியல் ரீதியாக சுரண்டும் சம்பவங்கள் பல அரங்கேறி வருகிறது. சில நேரங்களில் அது கொலை கொள்ளை போன்ற துயரங்களிலும் முடிந்துவிடுகிறது. இந்த வரிசையில் கல்லூரி மாணவியை காதலித்து வந்த இளைஞன் அந்த பெண்ணை கற்பழித்து, கர்ப்பமாக்கி பின்னர் கருக்கலைப்பிற்கு ஈடுபட்டு அதில் அந்தபெ பெண் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. முழுவிவரம் பின்வருமாறு:- 

Boyfriend made college student pregnant..Student dies during abortion

இதையும் படியுங்கள்: பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு, முதல்வரை கட்டிப்பிடித்துக் கொண்ட மாணவி.. காரணம் என்ன தெரியுமா?

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடோம், மாவட்டம் பூசுகுடேனைச் சேர்ந்தவர் புக்யா நந்து இவர் முளகாப்பள்ளி மண்டலம் வி.கே ராமாவரம் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை  காதலிப்பதாக சுற்றி வந்தார், அந்தப் பெண் கல்லூரியில் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி என்பதால், முதலில்  காதலுக்கு சம்மதிக்கவில்லை, ஆனால்  நந்து விடாப்பிடியாக பேசிபேசியே அந்தப் பெண்ணை  காதல் வலையில் வீழ்த்தினார். பின்னர் பழகிய சில நாட்களிலேயே அந்த இளைஞனும் பெண்ணும் பலமுறை உடலுறவில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்கள்: சிவில் தேர்வுக்காக டெல்லி பறந்த மனைவி, இளைஞனுடன் உல்லாசம்.. இரவெல்லாம் கடலை.. கழுத்தை நெறித்து கொலை.

இதில் அந்த பெண் கர்ப்பமானார், திருமணத்திற்கு முன்பாகவே கல்லூரி மாணவி கர்ப்பமானதால் புக்யா நந்து அது யாருக்கும் தெரியக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அதன் பிறகு காதலிக்கு கருக்கலைப்பு செய்ய திட்டமிட்டார், பத்ராச்சலத்திலுள்ள ஒரு  தனியார் மருத்துவமனைக்கு காதலியை அழைத்துச் சென்றார், காதலி என கூறாமல் மனைவி எனக் கூறி மருத்துவமனையில் சேர்த்தார், மருத்துவர்களும் அதை நம்பி அந்த பெண்ணுக்கு சிகிச்சை கொடுத்தனர், அந்த பெண்ணுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உடல்நிலை மோசமானது, இதை அறிந்த காதலன் நந்து அங்கிருந்து நைசாக  வெளியேறினார். 

Boyfriend made college student pregnant..Student dies during abortion

பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அந்தப் பெண்ணை அழைத்து வந்த இளைஞரை மருத்துவர்கள் தேடினார், ஆனால் அந்த இளைஞர் அங்கே இருந்து மாயமாகி இருந்தார், இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த பெண்ணின் விவரத்தை சேகரித்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர், மோசடி காதலனின் வார்த்தையை நம்பி கல்லூரிக்கு சென்ற மகள் உயிரிழந்த செய்தியை அறிந்து பெற்றோர்கள் கதறி அழுதனர்.

பின்னர் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து மருத்துவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது கர்ப்பமாக உள்ள அந்தப் பெண்ணை கருக்கலைப்பு செய்ய அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறினர். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அந்த இளைஞனை வலைவீசி தேடிவருகின்றனர். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios