கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி கணவனை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக மனைவி, கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மாங்காடு அடுத்த பட்டூர் காயிதேமில்லத் தெருவை சேர்ந்தவர் சாகுல்அமீது(70). இவரது மனைவி ஜபருன்னிசா(36). சாகுல்அமீதுக்கு ஜபருன்னிசா 3-வது மனைவி என்று கூறப்படுகிறது. ஆனால் கணவனுக்கும்-மனைவிக்கும் 34 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தனது அக்காள் கணவருடன் ஜபருன்னிசாவிற்கு நாளடைவில் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இந்த விவகாரம் சாகுல்அமீதுக்கு தெரிய வந்தது. மனைவியை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி தனது கள்ளக்காதலனிடம் முறையிட்டுள்ளார். நமது உல்லாசத்திற்கு இடையூறாக இருக்கும், தனது கணவன் சாகுல்அமீதை தீர்த்துக் கட்ட வேண்டும் என்று முடிவு செய்தனர்.

 

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சாகுல்அமீதை, மனைவி ஜபருன்னிசா மற்றும் கள்ளக்காதலன் உசேன் கம்பியால் பலமாக தலையில் தாக்கினான். இதில் நிலைக்குலைந்த சாகுல்அமீது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து உடலை அடக்கம் செய்ய முயற்சித்த போது சந்தேகம் அடைந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், அது குறித்து மாங்காடு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

 

இதனையடுத்து உடலை பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த கொலை தொடர்பாக ஜபருன்னிசா மற்றும் உசைனை கைது செய்து, அவர்களை சிறையில் அடைத்தனர். கடந்த சில வருடங்களாக கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை சம்பவங்கள் அதிகமாக அரங்கேறி வருகிறது. கடந்த மாதம் குன்றத்தூரில் கள்ளக்காதல் விவகாரத்தால் பெற்ற குழந்தைகளை தாயே கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.