திருப்பூரில் 17 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய தாயின் கள்ளக்காதலனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் மணிமுத்து, இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த வேலை பார்த்தார். இந்த பெண்ணின் கணவர் இறந்து விட்டதால் மணிமுத்துவுடன் நெருக்கமாக பழகி வந்தார். இந்த பழக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கவே இது கள்ளக்காதலாக மாறியது.

தனியாக வீடு எடுத்து தங்கி வந்த மணிமுத்து, தனது ஆசை காதலி நிர்மலாவையும், அவரது மகளையும் தனது வீட்டிற்கே அழைத்து சென்று தங்க வைத்து இருவரும் கணவன்-மனைவி போல் குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நிர்மலா வேலைக்கு சென்ற நேரத்தில் உடல் நிலையை காரணம் காட்டி, அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளார் மணி முத்து, அப்போது வீட்டில் இருந்த நிர்மலாவின் மகளான 17 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த விஷயத்தை தனது தாயிடம் சொல்லாமலேயே இருந்துள்ளார் அந்த சிறுமி.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த சிறுமிக்கு உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. உடனடியாக அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அச்சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் 2 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். சிறுமியிடம் அவரது தாய் கேட்ட போது மணிமுத்து தன்னிடம் வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக அழுதுகொண்டே செஒல்லியுள்ளார். இது குறித்து காங்கயம் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி மணி முத்து மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த பின்னர் திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.