மதுரை சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் சாய்லட்சுமி. இவரும் ராஜாக்கூரைச்  சேர்ந்த செந்தில்குமார் என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் செந்திலுக்கு சென்னையில் வேலை கிடைத்தால் அவர் அங்கு சென்றுவிட்டார். 

இதையடுத்து செந்தில் குமார், சாய்லட்சுமியை சென்னை வருமாறு அழைத்தார். அவரை நம்பிய சாய்லட்சுமி , தனது வீட்டிலிருந்து 8 பவுன் நகை மற்றும் 17 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு சென்னை வந்துவிட்டார். பணத்தையும் நகையையும் ஏமாற்றிப் பெற்றுக்  கொண்ட செந்தில், சாய்லட்சுமியுடன் பல முறை உல்லாசம் அனுபவித்துள்ளார்.

சாய்லட்சுமியை நன்றாக அனுபவித்து விட்டசெந்தில் அவரிடம் நீ ஊருக்குப் போ நான் பின்னால் வந்து உன்னைப்  பெண் கேட்கிறேன் என கூறியுள்ளார். இதை நம்பி சாய் லட்சுமியும் ஊருக்கு வந்துவிட்டார்.

ஆனால் சொன்னபடி செந்தில் பணத்தை  திருப்பிக் கொடுக்காமலும், திருமணம் செய்யாமலும் ஏமாற்றி இருக்கிறார்.

இதையடுத்து சாய் லட்சுமி ஒத்தக்கடை போலீசில் செந்தில் மீது அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.