தனது கள்ளக்காதலியை அவருடைய கணவன் கண்டித்ததால், அவர் பேசாமல் இருந்துள்ளார், இதனால் அவரை கொலை செய்துள்ளாராம் கள்ளக்காதலன் ளவரசன், 

தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்த நடேசன் - மகாராணி, நடேசன், கல்லாமொழியில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். 28 வயதாகும் மகாராணிக்கு விம்ரித் என்ற 5 வயதில் மகன் உள்ளான். 

இந்த நிலையில், நேற்று  நடேசன் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். மகனும் ஸ்கூலுக்கு போய்விட்டான். அப்போது, மகாராணியின் தந்தை உலகமுத்து தாது மகளை பார்க்க மதியம் வீட்டுக்கு வந்தபோது, மகாராணி கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதை கண்டு அலறிய உலகமுத்து, மகளை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக தூக்கி செல்ல முயன்றார், ஆனால், வழியிலேயே இறந்துள்ளார்.

இது சம்பந்தமாக சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் மோப்ப நாயுடன் வந்து விசாரணை தொடர்ந்தனர். இந்த விசாரணையில், போலீஸ் உண்மையான காரணம் தெரியாமல் திணறியது.

எனினும், இளவரசன் என்பவர் மீது சந்தேகம் வந்தது. இவர்தான் மகாராணியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார் என்ற தகவலும் கிடைத்தது. இந்நிலையில் தென்காசி கோர்ட்டில் இளவரசன் மகாராணியை தான் தான் கொலை செய்ததாக சரண் அடைந்துள்ளார். 

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் எதற்க்காக மகாராணியை கொலை செய்தேன் என விளக்கமாக கூறியுள்ளார்; மகாராணி என்கூட பேசுறது மகாராணியின் புருஷனுக்கு தெரிஞ்சு போச்சு. அதனால் மனைவியை கண்டித்துள்ளார். அந்த பேச்சை கேட்டு கொண்டு, என்கூட மகாராணி பேசவே இல்லை, நானே பேசப்போனால் கூட அவர் என்னை வெறுத்து ஒதுக்கினார். அந்த ஆத்திரத்தில் இருந்த நான், யாரும் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவரை வீடு புகுந்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டேன் என கூறியுள்ளார்.