குமரி மாவட்டம் காஞ்சாம்புறத்தை சோ்ந்த பட்டதாரியான  அசோக்கும்  அதே பகுதியை சோ்ந்த நிர்மலா என்ற நா்சும்  காதலித்து வந்தனா். மேலும் இருவரும் அடிக்கடி பல்வேறு ஊா்களுக்கு சென்று சுற்றி வந்துள்ளனா். 

இருவரும் திருமணம் செய்து கொள்ளயிருந்த நிலையில் நிர்மலாவின்  பெற்றோர்கள்  அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து  திருமணம் முடிவு செய்துள்ளனா். இதற்கு நிர்மலாவும் சம்மதித்துள்ளார்.  இதை கேள்விப்பட்ட காதலன் அசோக் அதிர்ச்சி அடைந்த நிலையில் காதலியிடம் மனசை மாற்றிக்கொள்ளாதே என கெஞ்சியும் அவர் சம்மதிக்கவில்லை.

இதனால் கலங்கிப் போன காதலன் அசோக் டாஸ்மாக்கில் குடித்துவிட்டு நண்பனுடன் சோ்ந்து நிர்மலாவை  பழிவாங்க திட்டமிட்டான். அந்த திட்டம்படி நிர்மலாவை  சந்தித்த அசோக் இனி நானும் நீயும் சேரமுடியாது. நான் உன்னை உயிருக்குயிராய் காதலித்தும் எந்த பலனும் இல்லை. 

நானும் இனி எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள போவதில்லை. உன் திருமணத்துக்கு முன் நான் இந்த ஊரை விட்டு வேறு எங்கேயாவது போக போறேன். அதனால் கடைசியாக உன்னிடம் கொஞ்சம் நேரம் தனிமையில் இருக்க ஆசைப்படுகிறேன் என்னுடன் வருவதயா ? என கேட்டுள்ளார்.

காதலன்  பேச்சில் மனம் உருகிய நிர்மலா அதற்கு சம்மதித்ததார். இதையடுத்து  அவர்கள் இருவரும் கன்னியாகுமரியில் ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கினர். அப்போது அசோக்கும் அவரது நண்பரும் ஏற்கனவே போட்டு வைத்த திட்டப்படி,  போலிசுக்கு போன் செய்து அவர்களை  லாட்ஜ்க்கு வரவழைத்தனர்.

போலிஸ் வந்ததும் 500 ருபாய் கொடுத்து அவரிடம் உல்லாசமாக இருக்க வந்தேன் என்று ஓரு செகன்டில் நிர்மலாவை   விபச்சாரியாக மாற்றினார் அசோக். மேலும் நிர்மலா  திருமணம் செய்ய இருந்த மாப்பிளைக்கும் தகவலை வாட்ஸ் அப்பில் அனுப்பிவிட்டான். இது குறித்து உண்மை தெரியவந்ததும் அசோக்கை கைது செய்த போலீசார் நிர்மலாவை  அந்த பெண் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.