கோவை மாவட்டம், பொள்ளாச்சி காளியாபுரம் கிராமத்தை சேர்ந்த  பாலன், தேவி பழங்குடி தம்பதிகளாக இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவது பிரசவத்துக்காக ஏப்ரல் 29-ம் தேதி மாலை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளனர். அன்று இரவே இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

இந்நிலையில், இந்த தம்பதிகளுக்கு இதற்க்கு முன்பு அறிமுகம் இல்லாத பெண் ஒருவர்  என் கணவரையும் அரசு மருத்துவமனையில் தான் அனுமதித்துள்ளேன். ஆனால், அங்கு ஆண்கள் மட்டுமே தங்க முடியும். எனவே, நான் இங்கு தங்கியிருந்து குழந்தையையும் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இவர்களும் பரிதாபப் பட்டு அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.  இரண்டு நாட்கள் அவர்களுடனே இருந்துள்ளார்.

டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு புறப்படும் முன்பு, அந்தப் பெண், குழந்தைக்கு காதில் கொப்புளம் உள்ளது. காது டாக்டரிடம் காட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். 

இதனைத் தொடர்ந்துmஅந்தப் பெண்ணும், பாலனும் குழந்தையை காது டாக்டரிடம் சென்றுள்ளனர். அங்கு சென்ற பிறகு, குழந்தைக்கு சொட்டு மருந்து வாங்கி வாங்க என அந்தப் பெண் சொல்லியுள்ளார். அதனால், பாலன் மருந்து வாங்க சென்ற சமயத்தில், அந்தப் பெண், குழந்தையை கடத்தி சென்றுவிட்டார். இதுகுறித்து, பொள்ளாச்சி  போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.