விடாமல் தொடர்ந்து உல்லாசத்திற்கு அழைத்தும், மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிடியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பவானி அடுத்த குருப்பநாயக்கன்பாளையம் விதைப்பண்ணை அருகே வசித்து வரும் செல்லமுத்து மகன் சக்திவேல், இவர் பவானியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

தாவரவியல் ஆசிரியர் சக்திவேல் 11-ம் வகுப்பு மாணவிகளிடம் தவறான முறையில் நடப்பதாக புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக 11-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளிடம் விடாமல் தொடர்ந்து உல்லாசத்திற்கு அழைத்தும், தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார், சில நேரங்களில் கண்ட இடத்தில் தொட்டுப்பேசியும் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிய வந்ததுள்ளது.

இது குறித்து மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்ததையடுத்து ஆத்திரமடைந்த பெற்றோர் தங்களது உறவினர்களுடன் பள்ளியை முற்றுகையிட்டு தவறான முறையில் நடக்கும் ஆசிரியரை பணி நீக்கம் செய்திட வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் பவானி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் ஆசிரியர் சக்திவேல் தலைமறைவானார். புகாரின் பேரில் ஆசிரியரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சக்திவேலை தேடி வந்தனர்.

இந்நிலையில், லட்சிநகர் பஸ் ஸ்டாப்பில் சங்ககிரி செல்வதற்காக சக்திவேல் நின்று கொண்டிருந்தார். அப்போது விரைந்து சென்ற பவானி மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வினோதினி அவரை கைது செய்தார். பின் சக்திவேல் கோர்ட்டில் ஆஜர்படுத்தபட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.