மதுரைக்கும் நாட்டு வெடிகுண்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கே கே நகர் பகுதியில் டிப்பன் பாக்‌ஸ்வெடிகுண்டு அண்ணாநகர் கோயில் பகுதியில் நாட்டு வெடிகுண்டு பஸ்சில் நாட்டு வெடிகுண்டு என போலீசார் அடிக்கடி கண்டுபிடிப்பது வழக்கம். அதே போல் மதுரை சம்மட்டிபுரத்தில் 3 உருண்டை வடிவிலான நாட்டு வெடிகுண்டை போலீஸ் கண்டுபிடித்திருக்கிறது. இதுவரைக்கும் கண்டெக்கப்பட்ட வீசப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் யார் வீசியது எதற்காக இப்படி நடந்தது என்று போலீஸ் கண்டுபிடித்ததாக தெரியவில்லை. இது போன்ற சம்பவம் மதுரையில் தொடர் சம்பவமாகவே அரங்கேறிக்கொண்டிருக்கிறது.


 மதுரை, சம்மட்டிபுரம் அருகே 3 ஆவது மற்றும் 4வது தெருகள் சந்திக்கும் இடத்தில் குடிசையுடன் கூடிய காலி இடத்தில் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் ஒரு பை கிடந்திருக்கிறது. இந்தப் பை குறித்து காவல்துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.இதை எடுத்து எஸ் எஸ் காலனி போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்று கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தனர். 

அப்போது அந்தப் பையில் உருண்டை வடிவிலான 3 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது. அந்த நாட்டு வெடிகுண்டுகளை நிபுணர்கள் கைப்பற்றி பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர்.இதையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் நேற்று 07.05.2020 வியாழக்கிழமை இரவு போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்த போது 2 ரவுடிகள் பிடி பட்டதாகவும், அவர்கள் அளித்த தகவலின்பேரில் நாட்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசாரின் விசாரணை தீவிரமடைந்திருக்கிறது.