பட்டப்பகலில் திமுக பிரமுகர் வீட்டு வாசலில் நாட்டு வெடிகுண்டை வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் திமுக பிரமுகர் வீட்டு வாசலில் நாட்டு வெடிகுண்டை வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர். 

புதுச்சேரி உப்பளம் நேத்தாஜி நகரில் வசித்து வருபவர் திமுக பிரமுகர் பிராங்கிளின். இவர் பொதுப்பணித்துறையில் ஒப்பந்த அடிப்படையில் சாலைகள் அமைக்கும் பணியையும் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை பிராங்க்ளின் வெளியே சென்றுள்ளார். அவரது வீட்டில் மனைவி குளோதினி, பேரன், பேத்திகள் மட்டும் உள்ளே இருந்துள்ளனர்.

அப்போது, அழகர்சாமி வீதி வழியாக நடந்து வந்த வாலிபர் ஒருவர் தான் கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை பிராங்க்ளின் வீட்டு கதவில் வீசினார். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது புகை மூட்டமாக இருந்தது. வெடிகுண்டு வீசிய வாலிபர் சாவகாசமாக பொறுமையாக நடந்து சென்று அழகர்சாமி சந்திப்பில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார்.

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். மேலும் வீட்டில் பொருப்பத்தப்பட்டிருந்த சிசிடியை ஆய்வு செய்த போது வீட்டின் அருகே மர்ம நபர்கள் ஒருவர் கையில் நாட்டு வெடிகுண்டை எடுத்து வந்து வீசிவிட்டு சென்றதும் பதிவாகி இருந்தது. மேலும் சிசிடிவி காட்சியை கொண்டு நாட்டு வெடிகுண்டு வீசி தப்பி சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.