இந்தியாவில், கிறுத்துவ மதத்தின் மீது மிக மிக தீவிரமான பற்றுடைய கிறுத்துவ மக்கள் இருக்கும் மாநிலங்களில் கேரளா முக்கியமானது. மிக முக்கிய தேவாலயங்களை கொண்ட பிரதேசம் இது. ஆனால் இதே கேரளத்தில் இருந்துதான் கிறுத்துவத்தின் பெருமைக்கு சவால் விடும், சர்ச்சையான பல விஷயங்களும் அடிக்கடி வெளியே வரும். அந்த வகையில்தான் கடந்த சில காலமாக பற்றி எரிகிறது பிஷப்‘பிராங்கோ’ விவகாரம். 

ஜலந்த மறை மாவட்ட பிஷப் பிராங்கோ முல்லக்கல். இவர் மீது கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி லூசி, பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். மிகப்பெரிய விவகாரத்தை கிளப்பிய இந்த பிரச்னையில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பரில் பிராங்கோ கைது செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கு தொடர்பாக பலர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அதில் சில கன்னியாஸ்திரிகளும் அடக்கம். இதில் 14வது விசாரணை சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கன்னியாஸ்திரி ஒருவர் சமீபத்தில் பிராங்கோ மீது மேலும் ஒரு புகார் கூறியுள்ளார். 
“பீஹார்ல ஊழியத்துல இருந்த நான் ஒரு தடவை கேரளா வந்தேன். 

அப்ப பிஷப் பிராங்கோ என்னை மொபைல் வீடியோ காலில் அழைத்தார். என்னோட உடலின் ரகசிய உறுப்புகளை மொபைல் கேமெராவில் காட்ட வற்புறுத்தினார். ஒரு மடத்துல வெச்சு என்னை கட்டிப்பிடிக்கவும் ட்ரை பண்ணினா. ஆனால் அவர் மேலே இருந்த பயத்தால் நான் போலீஸில் புகார் கொடுக்கவில்லை.” என்று சொல்லியிருக்கிறார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிராங்கோ மீது புது மற்றும் தனி வழக்கு பதிவு செய்ய வேண்டும்! என்று கன்னியாஸ்திரிகளே கோரிக்கை வைத்துள்ளனர்.