தம்பியை சுட்டுக் கொன்றது ஏன்..? பில்லா ஜெகன் பரபரப்பு வாக்குமூலம்...!
தூத்துக்குடியில் சொத்து தகராறில் தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற திமுக நிர்வாகி பில்லா ஜெகன் எதற்காக தம்பியை கொன்றேன் என போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தூத்துக்குடியில் சொத்து தகராறில் தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற திமுக நிர்வாகி பில்லா ஜெகன் எதற்காக தம்பியை கொன்றேன் என போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி சின்ன கடைத்தெருவைச் சேர்ந்தவர் பில்லாஜெகன். தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவராகவும், தி.மு.க தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராகவும் உள்ளார். இவர், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளரும் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். அண்ணன் பில்லா ஜெகனுடன் 3 தம்பிகளும் லாரி டிரான்ஸ்போர்ட் தொழிலைக் கவனித்து வந்தனர். ஏற்கனவே பில்லா ஜெகனுக்கும் அவரது கடைசி தம்பியான சிமன்சனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 22-ம் தேதி நள்ளிரவில் மீண்டும் சொத்துப் பிரச்னையால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்கு வாதம் கை கலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இருவருக்கும் இடையே நிகழ்ந்த தகராறில், ஆத்திரமடைந்த பில்லா ஜெகன், தம்பி சிமன்சனை துப்பாக்கியால் சுட்டதும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில் பில்லா ஜெகன் தப்பி கேரளா சென்றார் அவரை கேரளா போலீசார் கைது செய்து தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நாங்கள் 4 பேர் சகோதரர்கள். லாரிசெட் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடத்தி வருகிறோம். நான் அரசியலில் இருப்பதால் அதிக பணம் செலவானதால், கடன்சுமை அதிகமாயிட்டு. இதனையடுத்து எங்களது சகோதர்கள் சொத்தை பிரித்து தருமாறு என்னிடம் தொடர்ந்து கூறி வந்தனர்.
இதில், லாரிசெட்டை என்னோட பேருக்கு எழுதிக்கொடுக்க வேண்டும் என்று கடைசித் தம்பி சிமன்சன் தொல்லை கொடுத்து வந்தார். நான் ஆரம்பிச்சு நடத்திட்டு வர்ற லாரிசெட்டை அவன் கேட்டதால் எனக்கு ஆத்திரம் வந்தது. இதனால் 23-ம் தேதி இரவு சிமன்சன் வீட்டிற்கு சென்று பேசிய போது எங்களுக்குள் வாக்குவாதம் முற்றி ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற நான் பாதுகாப்புக்கு வைத்திருந்த துப்பாக்கியால் அவனை தொடையில் சுட்டேன். அதிக ரத்தம் வெளியேறி அவன் உயிரிழந்தான். பின்னர் நான் தலைமறைவாக எனது நண்பர்களுடன் காரில் கேரளா சென்றேன். அப்பொழுது வாகன சோதனையில் கேரளா போலீசார் என்னை கைது செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.