உத்தரப்பிரதேசத்தில் 19 வயது பட்டியலின இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், பீகாரில் பட்டியலின பெண் 7 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலத்தின் புக்சர் மாவட்டம் ஒஜாகா பரான் என்ற கிராமத்தை சேர்ந்த பெண் தனது 5 வயது குழந்தையுடன் பக்கத்து கிராமத்தில் அமைந்துள்ள வங்கிக்கு சனிக்கிழமை நடந்து சென்றுள்ளார். அப்போது அங்குவந்த மர்மகும்பல் அந்த பெண்ணையும், அவரது 5 வயது குழந்தையும் கடத்தி சென்றனர்.

 மேலும், கடத்தி சென்ற அந்த பெண்ணை அந்த கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் வெளியே சொல்லிவிடக்கூடாது என்பதால் அந்த கொடூர கும்பல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த பெண்ணை, அவரது 5 வயது குழந்தையுடன் சேர்த்து கை, கால்களை கட்டியுள்ளனர். பின்னர், அந்த பெண்ணையும், அவரது 5 வயது குழந்தையையும் அந்த கொடூர கும்பல் அப்பகுதியில் உள்ள ஆற்றில் வீசிச்சென்றனர். ஆற்றில் வீசப்பட்ட அந்த பெண் சத்தமிட்டதைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்த கிராம மக்கள் அந்த பெண்ணை ஆற்றில் இருந்து மீட்டனர்.

ஆனால், அந்த பெண்ணின் 5 வயது குழந்தை ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தது. உயிரிழந்த குழந்தையிடன் உடலை மீட்ட கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயங்களுடன் இருந்த அந்த பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அந்த பெண் அளித்த புகாரையடுத்து, இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.வங்கிக்கு சென்ற பெண் மர்மநபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.