பீகார் மாநிலத்தின் சரண் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பிதாயூரி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் எருமை மாடுகள் கட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தில் 3 நபர்கள் இன்று சுற்றித் திரிந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களையும் சுற்றி வளைத்தனர்.

இதையடுத்து, அந்த நபர்கள் தப்பி செல்ல முயற்சித்தனர். அதற்குள் அந்த கும்பல் 3 பேர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. 

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுவரை 3 பேரை கைது செய்துள்ளதாகவும் மேலும், சிலரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.