பாட்னாவில் 5-ம் வகுப்பு மாணவியை 9 மாதங்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கருவுறச் செய்த பள்ளி முதல்வரையும், ஆசிரியரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

 

பாட்னாவின் புல்வாரி ஷரிஃப் என்ற இடத்தில் தனியார் பள்ளி மாணவியை தேர்வு விடைத் தாள் தொடர்பாக பள்ளி முதல்வர் அழைப்பதாகக் கூறி அவரது அறைக்கு ஆசிரியர் அழைத்துச் சென்றார். முதல்வரின் அறையில் ரகசிய படுக்கை அறையில் மாணவியை இருவரும் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

 

முதல் முறை பாலியல் பலாத்காரம் செய்தபோது அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்ட இருவரும் அதை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாகக் கூறி மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் மாணவிக்கு அடி வயிற்றில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து பெற்றோர் மாணவியை மருத்துவம்னையில் அனுமதித்தனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவியின் வயிற்றில் 3 வாரக் கரு வளர்ந்திருப்பதாகத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மாணவியிடம் விசாரித்த போது ஆசிரியர்கள் என்ற பெயரில் நடமாடிய இரண்டு கால் மிருகங்களின் குரூரம் அம்பலமானது. இது தொடர்பான புகாரின் பேரில் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.