பெங்களூரு இரட்டை கொலை: யார் இந்த ஜோக்கர் ஃபெலிக்ஸ்?

பெங்களூரு இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜோக்கர் ஃபெலிக்ஸ் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

Bengaluru double murder Who is Joker Felix

பெங்களூருவின் அமிர்தஹள்ளி பகுதியில், இணைய சேவை வழங்கும் ஏரோனிக்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் பனிந்தர சுப்பிரமணியா (36), தலைமை செயல் அதிகாரி வினுகுமார் (40) ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களது அலுவலகத்தில் நுழைந்த கும்பல் ஒன்று, கூர்மையான ஆயுதங்களால் அவர்கள் இருவரையும் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டது. படுகாயமடைந்த அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட பெங்களூரு போலீசார், தும்கூரு அருகே ஃபெலிக்ஸ், வினய் ரெட்டி, சந்தோஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஃபெலிக்ஸ் என்ற ஜோக்கர் ஃபெலிக்ஸ், ஏரோனிக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்பது தெரியவந்துள்ளது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வணிகப் போட்டியின் காரணமாக ஏரோனிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் எம்.டியான பனிந்தர சுப்பிரமணியாவை பழிவாங்கும் பொருட்டு ஃபெலிக்ஸ் இந்த கொலையை செய்ததாக தெரியவந்துள்ளது. மேலும், சி.இ.ஓ., வினுகுமாரை கொல்வது நோக்கம் அல்ல எனவும், பனிந்தர சுப்பிரமணியாவை தாக்கும் போது, குறுக்கிட்டதால், அவரையும் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

2-வது திருமணத்துக்கு எதிர்ப்பு! இரும்பு கம்பியால் மருமகள் அடித்து கொலை! ஜாமீனில் வந்த மாமனார் தற்கொலை.!

யார் இந்த ஜோக்கர் ஃபெலிக்ஸ்?


டிக்டாக்கில் புகழ்பெற்ற ஜோக்கர் ஃபெலிக்ஸ், தன்னை ஒரு கன்னட ராப்பர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, ராப் பாடல்கள் பாடுவது போன்ற சில வீடியோக்களையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். joker_felix_rapper என்ற இன்ஸ்டாகிராம் பக்கமும், JF Media என்ற யூடியூப் சேனலும் ஜோக்கர் ஃபெலிக்ஸுக்கு உள்ளது. அதில் அவரை ஆயிரக்கணக்கான நபர்கள் பின்பற்றுகின்றனர்.

Bengaluru double murder Who is Joker Felix

சம்பவம் நடைபெறுவதற்கு ஏறக்குறைய ஒன்பது மணி நேரத்திற்கு முன்பு ஜோக்கர் ஃபெலிக்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், “இந்த கிரக மக்கள் அனைவரும் முகஸ்துதி பாடுபவர்களாகவும், ஏமாற்றுக்காரர்களாகவும் இருக்கின்றனர். அதனால் நான் இந்த கிரக மக்களை காயப்படுத்துகிறேன். நான் கெட்டவர்களை மட்டுமே காயப்படுத்துகிறேன். எந்த நல்ல மனிதர்களையும் காயப்படுத்தவில்லை.” என பதிவிடப்பட்டுள்ளது.

கொலை நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, கொலை நடந்த செய்தியை அவர் மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டசாக பதிவிட்டுள்ளார். அன்று இரவு 10 மணி வரை அவர் தனது இன்ஸ்டாவில் ஆக்டிவாகவே இருந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் உள்ள ஃபெலிக்ஸின் பதிவுகளின்படி, டிசி காமிக்ஸ் வில்லனான ஜோக்கர் கதாப்பாத்திரத்தால் அவர் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

கொடூரமான கொலைகளுக்கு என்ன காரணம்?


ஏரோனிக்ஸ் நிறுவனத்தால், ஃபெலிக்ஸ் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும், அதனால் இந்த கொலைகள் நடந்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேக்கின்றனர். ஏரோனிக்ஸ் நிறுவனத்தில் சில காலம் பணியாற்றிய ஃபெலிக்ஸ், அதில் இருந்து விலகி சொந்த நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அந்த தொழிலில் முக்கிய போட்டியாளராக  பனிந்தர சுப்பிரமணியா இருப்பதால், அவரை தீர்த்துக்கட்ட ஃபெலிக்ஸ் திட்டம் போட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios