தூக்கில் தொங்கிய பியூட்டீசியன்...! கோவையில் நடந்த திக் திக் சம்பவம்..! 

தொழிலில் வளர்ச்சி காண வங்கியில் கடன் வாங்கி பின்னர் அடைக்க முடியாத காரணத்தினால் பியூட்டிஷியன் ஒருவர் கோவையில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதிக்கு அடுத்து உள்ளது ராஜ நாயக்கர் தோட்டம். இங்கு தேவராஜன் தீபா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். அந்த பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். இந்தப் பார்லரை விரிவுபடுத்தி வளர்ச்சி அடைய வேண்டும் என நினைத்த தீபா பலரிடம் கடனாக பணம் வாங்கி உள்ளார்.

பின்னர் ஒருகட்டத்தில் யாருக்கும் பணம் தரமுடியாமல் இருந்துள்ளது. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார். கொடுத்த கடனைக் கேட்டு பலரும் தீபாவை நச்சரித்துள்ளனர்.இதன் காரணமாக தீபா மற்றும் அவருடைய கணவர் இடையே அடிக்கடி சண்டை வருவதும் உண்டு. 

இந்த நிலையில்,பிரச்னையில் இருந்து எப்படி மீள்வது என நினைத்த தீபா கணவர் பேசும் கடுமையான வார்த்தைகளையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் தீபாவின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கணவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்ற போதிலும் தீபாவின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .