டியூஷன் டீச்சருடன் கண்மூடித்தனமான காதல், உல்லாசம்... குடும்பமே சேர்ந்து அடித்துக் கொன்ற கொடூரம்.
அந்தப் பெண்ணின் அழகில் மயங்கிய கபில் குப்தா, அவரிடம் நட்பாக பழகினார், பின்னர் அவர்களுக்கிடையே காதல் உருவாகி இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவிக்கும் அளவுக்கு நெருக்கமாகினர்.
தொழிலதிபரை காதலித்து அவரிடம் பணம் கேட்டு பிளாக்மெயில் செய்த டியூஷன் ஆசிரியை அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து இக்கொலையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள டாடர்பூர் காவல் நிலைய எல்லைக்குள் கடந்த மார்ச் 16-ம் தேதி பாலத்தின் அடியில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் டெல்லியிலிருந்து ராஜஸ்தான் குடியேறிய பிரியங்கா (29) என கண்டறியப்பட்டது. ராஜஸ்தானில் அவர் ட்யூசன் ஆசிரியராகப் பணியாற்றிய நிலையில் உள்ளூர் தொழிலதிபர் கபில் குப்தா வீட்டுக்கு சென்று குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வந்தார். இந்நிலையில்தான் அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அதாவது கபில் குத்தா வீட்டிற்கு பிரியங்கா டியூஷன் சொல்லிக் கொடுக்க வந்த போது அந்தப் பெண்ணின் அழகில் மயங்கிய கபில் குப்தா, அவரிடம் நட்பாக பழகினார், பின்னர் அவர்களுக்கிடையே காதல் உருவாகி இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவிக்கும் அளவுக்கு நெருக்கமாகினர்.
அதுக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த பிரியங்கா இதை சரியாக பயன்படுத்தி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கபிலை வற்புறுத்தினார். ஆனால் கபில் அதற்கு மறுக்கவே அப்படியெனில் தனக்கு 50 லட்சம் பணம் தந்தால் ஒதுங்கி விடுவதாக பிரியங்கா நிபர்ந்தனை வித்தார். அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என கூறியும் கபிலை பிரியங்கா விடவில்லை. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கபில் பிரியங்காவின் டார்ச்சரை பொறுக்க முடியாமல்மனைவி மற்றும் மாமியாரிடம் தனது உண்மையான விஷயத்தை கூறினார். இந்நிலையில் கபிலின் குடும்பத்தார் பிரியங்காவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். பிரியங்கா கேட்ட பணத்தை தருவதாக ஒப்புக் கொள்ளுமாறு அவர்கள் கபிலுக்கு ஆலோசனை கூறினார். அதேபோல கபிலும் பணத்தை தருவதாக பிரியங்காவிடம் கூறியதுடன் வீட்டிற்கு தனியாக வருமாறு அழைத்தனர்.
பணம் கிடைக்கப் போகிறது என்ற ஆசையில் பிரியங்கா கபில் அழைத்த இடத்திற்கு வந்தார். அப்போது அங்கிருந்த அவரது குடும்பத்தினர் ஒன்றுகூடி பிரியங்காவை அடித்துக் கொலை செய்தனர். பின்னர் அவரது சடலத்தை சாக்கு பையில் கட்டி டாடர்பூர் பாலத்தின் அடியில் வீசினர். இந்நிலையில் பாலத்தின் கீழே மர்ம மூட்டை ஒன்று கிடப்பதாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பிரியங்காவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர் கபில் குடும்பத்தார் அந்த பெண்ணை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் கபில் மற்றும் அவரது மனைவி மற்றும் அவரது இரண்டு சகோதரர்களையும் போலீசார் திங்கட்கிழமை கைது செய்தனர்.
இதற்கிடையில் பிரியங்கா இதேபோன்று 8 பேரை ஏமாற்றியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. டியூஷன் நடத்துவதாக வீட்டுக்கு சென்று அங்கு குழந்தைகளின் தந்தைக்கு வலைவீசி அவர்களை காதல் வலையில் வீழ்த்தி, பிறகு மிரட்டி மிரட்டி பணம் பறிப்பதை அவர் வாடிக்கையாக வைத்திருந்தார் என போலீசார் கண்டறிந்தனர். இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.