சட்டவிரோதமாக கரடி உள்ளிட்ட விலங்குகளை கொன்று அதன் ஆண்குறிகளை சாப்பிடும் பார்ட்டி-பெஹெலியா என்ற பழங்குடி  சமூகத்தை சேர்ந்த கொடூர வேட்டையாடி ஒருவரை நீண்ட தேடுதலுக்குப் பின்னர் வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தின் தென்பகுதிகளில் வாழும் பார்ட்டி-பெஹெலியா எனும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்  யார்லென்,  இவரது சமூகம் அபோகலிப்ட்டா ஹாலிவுட் திரைப்படத்தில் வருவது போன்று, ஒரு பழங்குடியின சமூகம்.  விலங்குகளின் ஆண்குறிகளை சாப்பிட்டால் ஆண்மை விருத்தி ஏற்படும் என்பதில் நம்பிக்கை உடையவர்கள் ஆவர்.  இதனால் மத்திய இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் புலி, கரடி போன்ற விலங்குகளை வேட்டையாடி, அதன் ஆணுறுப்புகளை அறுத்து சாப்பிடும் வேலையில் ஈடுபட்டுவருகின்றனர். 

இந்நிலையில் இந்தியாவின் மத்திய மேற்கு இந்தியாவில் உள்ள வனப்பகுதிகளில் விலங்குகளை வேட்டையாடுதல் மற்றும் கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக ஏற்கனவே யார்லென் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய பிரதேசம் கன்ஹாதேசிய பூங்காவில் கரடி ஒன்றை வேட்டையாடி அதன் ஆணுறுப்பை வெட்டி எடுத்தார் என்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு  ஓராண்டு சிறைக்குப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார் யார்லென்... பிறகும் அதைவேலையில் அவர் ஈடுபட்டதால்,  வனத்துறையினர் அவரை தேடி தேடிவந்தனர். ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக அவர் அனைவரின்  கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு காட்டு விலங்குகளை வேட்டையாடி வந்தார்.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி குஜராத்தில் கரடி வேட்டையில் ஈடுபட்டிருந்த யார்லென், வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார், அவரை விசாரித்ததில் பல அதிர்ச்சி தரும் தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். அதாவது இந்தியாவிலுள்ள புலி, கரடி, உள்ளிட்ட  விலங்குகளின் ஆண் உறுப்பு மற்றும் கல்லீரலுக்கு சீனாவில் நல்ல மவுசு இருப்பதால் அந்த வேட்டையில் தான் ஈடுபட்டு வந்ததாக அப்போது அவர் தெரிவித்தார்,அவர் கூறியதைக் கேட்டு  வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர் பின்னர் அவர் மீது விலங்குகளை கொடூரமாக வேட்டையாடுதல்  மற்றும் அதை கடத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து யார்லெனை சிறையில் அடைத்தனர்.